/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தெரு நாய் கடித்து குழந்தை படுகாயம்
/
தெரு நாய் கடித்து குழந்தை படுகாயம்
ADDED : செப் 29, 2025 07:25 AM
ஓசூர்: ஓசூர் அருகே பெத்தமுத்தாலி கிராமத்தை சேர்ந்த ஷரிஷ் - வெண்ணிலா தம்பதி. இவர்க-ளுக்கு, 3 வயதில் ஹர்ஷவர்தன் என்ற மகன் உள்ளார். நேற்று காலை குழந்தையை அப்பகு-தியில் சுற்றித்திரிந்த நாய் கடித்தது. அதேபோல், ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த தனியார் நிறு-வன ஊழியர் சந்தோஷ், 26, என்பவரை, அவர் வளர்த்து வந்த பூனை நேற்று கடித்தது. அதனால் பூனையை காட்டில் விட்டார்.
குழந்தை ஹர்ஷ-வர்தன் மற்றும் சந்தோஷ் ஆகியோர், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்-பட்டனர். ஓசூர் அரசு மருத்துவமனைக்கு மாதந்-தோறும், 200 பேருக்கு மேல், நாய் கடியால் சிகிச்சை பெற வருகின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு, 4 முதல், 5 பேர் வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.