/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'போதை' தகராறில் நண்பரை கொன்று வீட்டில் புதைத்த துணி வியாபாரி கைது
/
'போதை' தகராறில் நண்பரை கொன்று வீட்டில் புதைத்த துணி வியாபாரி கைது
'போதை' தகராறில் நண்பரை கொன்று வீட்டில் புதைத்த துணி வியாபாரி கைது
'போதை' தகராறில் நண்பரை கொன்று வீட்டில் புதைத்த துணி வியாபாரி கைது
ADDED : நவ 20, 2025 02:49 AM
கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே, மதுபோதையின் நண்பரை அடித்து கொன்ற துணி வியாபாரியை, போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளியை சேர்ந்தவர் சென்னகேசவன், 40, துணி வியாபாரி. இவரது வீட்டு முன் நேற்று காலை ஒரு ஆண் சடலம் கிடந்தது. பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் பர்கூர் இளவரசன், கந்திகுப்பம் கஸ்துாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன், 48, என தெரிந்தது. அவரது உடல் சேறும், சகதியுமாக இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. சென்னகேசவனிடம் விசாரித்தபோது, தமக்கு எதுவும் தெரியாது எனக்கூறினார். அக்கம் பக்கம் விசாரித்தபோது, சென்னகேசவனும், கணேசனும் இரு நாட்களுக்கு முன் ஒன்றாக சுற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சென்னகேசவனிடம் நடத்திய விசாரணையில், அவர் கணேசனை கொன்றது தெரியவந்தது.
சென்னகேசவன் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:
கல்லாவியை சேர்ந்த கணேசன், கடந்த, 20 ஆண்டுகளாக பர்கூரில் தங்கி, கேபிள் 'டிவி' தொழில் செய்து வந்தார். இவருக்குமான நட்பில், அவர் பர்கூர் வரும்போது மது குடிப்போம். கணேசன் எங்கள் வீட்டில் தான் தங்குவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, 16ம் தேதி மது குடித்தபோது, கணேசன், பிரியாணியை கீழே சிந்தியவாறு சாப்பிட்டார். இதை யார் சுத்தம் செய்வது எனக்கேட்ட தகராறில் கணேசனை தாக்கினேன். இதில் அவர் மயங்கி விழுந்து இறந்தார்.
கணேசனின் உடலை, அன்றிரவு எங்கள் வீட்டு வளாகத்தில், 2 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்தேன். நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதில் உடல் வெளியே வந்து, துர்நாற்றம் வீசியது. அதிர்ச்சியடைந்த நான், உடலை வெளியே எடுத்து, சாலையில் போட்டு விட்டேன். பின் என் வீட்டு முன், யாரோ ஒருவரின் உடல் கிடப்பதாக பொதுமக்களிடம் கூறியதில், போலீசிடம் சிக்கினேன்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

