/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்களுடன் முதல்வர் திட்டம்; கல்லாவியில் முகாம் துவக்கம்
/
மக்களுடன் முதல்வர் திட்டம்; கல்லாவியில் முகாம் துவக்கம்
மக்களுடன் முதல்வர் திட்டம்; கல்லாவியில் முகாம் துவக்கம்
மக்களுடன் முதல்வர் திட்டம்; கல்லாவியில் முகாம் துவக்கம்
ADDED : ஜூலை 31, 2024 07:19 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாவி, சந்திரப்பட்டி, பெரிய கொட்டகுளம், திருவனப்பட்டி, வீரணகுப்பம் ஆகிய பஞ்.,த்தை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நேற்று மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கப்பட்டது.
இம்முகாமில் வருவாய் துறை, மின் துறை,வேளாண் துறை உள்பட அனைத்து துறைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், மாவட்ட சேர்மன் மணிமேகலை, ஒன்றிய சேர்மன் உஷாராணி ஆகியோர், முகாமை துவக்கி வைத்தனர். பி.டி.ஓ.,க்கள் தவமணி, பாலாஜி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினிசெல்வம், தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்., தலைவர்கள் ராமன், இன்பசேகரன், ரம்யா, ராணி, பட்டாபி மற்றும் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.