/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்
/
கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்
கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்
கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்
ADDED : செப் 19, 2025 01:07 AM
கிருஷ்ணகிரி :கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், பொதுமக்கள் கைத்தறி ஆடைகளை வாங்கி, நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும் என, மாவட்ட வருவாய் அலுவலர் வேண்டு
கோள் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு, 30 சதவீத தள்ளுபடி விற்பனையை டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், நேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு, புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டு புடவைகள், சேலம், தஞ்சாவூர் பட்டு புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன.
மேலும், கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி சிறப்பு தள்ளுபடியை பயன்படுத்தி, கைத்தறி ஆடைகளை வாங்கி, நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவிட வேண்டும். இவ்வாறு கூறினார்.கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை உதவியாளர் மாலதி, கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி, விற்பனை நிலைய மேலாளர் சிலம்பரசன் மற்றும் பணியாளர்கள்
கலந்து கொண்டனர்.