/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பழுதடைந்த ஓசூர் மேம்பாலத்தை 5 நாட்களில் சீர் செய்ய கலெக்டர் அறிவுரை
/
பழுதடைந்த ஓசூர் மேம்பாலத்தை 5 நாட்களில் சீர் செய்ய கலெக்டர் அறிவுரை
பழுதடைந்த ஓசூர் மேம்பாலத்தை 5 நாட்களில் சீர் செய்ய கலெக்டர் அறிவுரை
பழுதடைந்த ஓசூர் மேம்பாலத்தை 5 நாட்களில் சீர் செய்ய கலெக்டர் அறிவுரை
ADDED : ஆக 30, 2025 01:10 AM
ஓசூர் ஓசூரில், பழுதடைந்த மேம்பாலத்தை, அடுத்த, 5 நாட்களுக்குள் சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பழுதடைந்த உயர்மட்ட மேம்பாலம் சீரமைப்பு பணி, பாகலுார் சாலையில், புசுவு முதல் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் வரையில் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றறை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே மேம்பாலம் விலகிய பகுதியில் பணியாற்றும் அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர்கள், 'மேம்பாலத்தில் பழுதான பழைய பேரிங்குகளை அகற்றிவிட்டு, புதிய பேரிங்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது' என்றனர். விரைவாக பணிகளை முடித்து, அடுத்த, 5 நாட்களில் சீர் செய்ய வேண்டும் என கலெக்டர் தினேஷ்குமார் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பாகலுார் சாலையில், புசுவு முதல் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் வரையில் 2 கி.மீ., தூரத்திற்கு நடக்கும், 12.80 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு வழி சாலை அமை
க்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், ஓசூர் சப்கலெக்டர் ஆக்ரிதி சேத்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன்
இருந்தனர்.