/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மீது புகார்
/
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மீது புகார்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மீது புகார்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மீது புகார்
ADDED : மே 05, 2024 01:57 AM
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஊத்தங்கரை இந்திரா நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணகிரி
கிழக்கு மாவட்ட பா.ஜ., முன்னாள் செயலர் வரதராஜன். இவர், ஊத்தங்கரை
போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி
கிழக்கு மாவட்ட, பா.ஜ., தலைவராக உள்ள சிவப்பிரகாசம் பர்கூரை
சேர்ந்தவர், இவர் என்னிடம், ஒரு லட்சத்து, 92 ஆயிரம் ரூபாயை கடனாக
பெற்றார். பணத்தை தருமாறு கேட்கும் போதெல்லாம், வாய்தா மேல் வாய்தா
வைத்துக் கொண்டே உள்ளார். இது சம்பந்தமாக நேற்று முன்தினம் பணம்
தருமாறு கேட்ட போது, என்னை மிரட்டும் தொணியில் பேசினார், எனவே,
என்னுடைய பணத்தை சிவப்பிரகாசிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.