/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிலிண்டர் பயன்பாடு குறித்து முகவர்களுடன் ஆலோசனை
/
சிலிண்டர் பயன்பாடு குறித்து முகவர்களுடன் ஆலோசனை
ADDED : ஜன 01, 2025 01:21 AM
தர்மபுரி, ஜன. 1-
தர்மபுரி மாவட்ட, உணவுப் பொருள்
வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், எரிவாயு முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், சிலிண்டர் வினியோகிக்கும் வினியோக பணியாளர்கள், சிலிண்டரை பரிசோதனை செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்புடன் வழங்க வேண்டும். கைரேகை படியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, பாதுகாப்பான சிலிண்டர் ஏஜன்சி மூலம் வழங்க வேண்டும். மலை கிராமங்களில், மொபைல் எண் மற்றும் மேசேஜ் பெறப்படுவது காலதாமதம் ஏற்படும். இதை, நுகர்வோர் ஏற்க வேண்டும். சிலிண்டர் வினியோகிக்கும் ஊழியர்கள் அவற்றின் விலையை விட கூடுதலாக பணம் வசூலித்தால், நுகர்வோர் அருகில் உள்ள தங்கள் சிலிண்டர் பெறும் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கலாம். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் வினியோகிக்கும் முறைகள், சிலிண்டர் எடை மற்றும் லிட்டர் அளவு குறைவு மற்றும் கலப்பட பொருட்களை கண்டறிய சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், பென்னாகரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க தலைவர்
சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.

