/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலைகளில் திரிந்த மாடுகளை பிடித்து மாநகராட்சி அபராதம்
/
சாலைகளில் திரிந்த மாடுகளை பிடித்து மாநகராட்சி அபராதம்
சாலைகளில் திரிந்த மாடுகளை பிடித்து மாநகராட்சி அபராதம்
சாலைகளில் திரிந்த மாடுகளை பிடித்து மாநகராட்சி அபராதம்
ADDED : ஜூலை 06, 2024 08:22 AM
ஓசூர்: சாலைகளில் சுற்றித்திரிந்த, 10 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்த விரிவான செய்தி கடந்த, 29ல், நமது நாளிதழில் வெளியானது. இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சினேகா, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, மாநகராட்சி மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையிலான துப்புரவு ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், துாய்மை பணியாளர்கள் அடங்கிய குழுவினர், ஓசூர் நகர் பகுதியில் நேற்று சாலைகளில் சுற்றித்திரிந்த, 10 மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு மொத்தம், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும், சாலைகளில் தொடர்ந்து மாடுகளை சுற்றித்திரிய விட்டால், அவற்றை பிடித்து திரும்ப ஒப்படைக்க மாட்டோம் என்றும், மாடுகளை தங்களது சொந்த இடங்களில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும் என, அதன் உரிமையாளர்களை கேட்டுக்கொண்டனர்.