/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்களை சமாளிக்க தவிக்கும் கவுன்சிலர்கள் கெட்ட பெயரை சம்பாதித்து வருவதாக புலம்பல்

ADDED : ஜன 09, 2025 06:50 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் கடந்த 2022ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, 45 கவுன்சிலர்கள் உள்ளனர்.
ஓசூர் மாநகராட்சியில் கடந்த மூன்றாண்டுகளில் மக்களின் அடிப்படை தேவைகளை கூட மாநகராட்சி நிர்வாகத்தால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. அவற்றை சரி செய்ய, தற்போதைய கமிஷனர் ஸ்ரீகாந்த் போராடி வருகிறார்.
மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததால், கவுன்சிலர்களிடம் எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.
தினமும் காலையில் தண்ணீர், சாலை வசதி, தெரு விளக்கு என பல்வேறு அடிப்படை தேவைகளுக்காக, கவுன்சிலர்கள் வீடுகளுக்கே மக்கள் படையெடுத்து வருகின்றனர். மேலும், அடிக்கடி சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.
அப்போது வந்து மக்களை சமாதானப்படுத்தும் அதிகாரிகள், அதன் பின் அடிப்படை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்காததால், கவுன்சிலர்கள் பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.