/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
10 பவுன் சங்கிலி பறித்த தம்பதி கைது
/
10 பவுன் சங்கிலி பறித்த தம்பதி கைது
ADDED : நவ 23, 2024 01:39 AM
10 பவுன் சங்கிலி பறித்த தம்பதி கைது
கிருஷ்ணகிரி, நவ. 23-
பர்கூர் அடுத்த கொரலசின்னப்பசெட்டி தெருவை சேர்ந்த மூதாட்டி உஷாராணி, 65. இவர் மகன் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில், வீட்டில் தனியாக வசித்து வருகிறர். இவர் நகை, பொருட்களை அடமானம் வைத்து பணம் கொடுத்து வந்துள்ளார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி, 19, என்பவர் அவ்வப்போது நகை, வெள்ளி பொருட்களை அடகு வைத்து பணம் பெற்று சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழ்செல்வி, உஷாராணிக்கு போன் செய்து பணம் கேட்டுள்ளார். வீட்டிற்கு வருமாறு உஷாராணி கூறியுள்ளார். இரவு, 10:00 மணியளவில் வீட்டிற்கு வந்த தமிழ்செல்வி, அவரது கணவர் நாகப்பன், 26, ஆகியோர், உஷாராணியின் கழுத்தில் கத்தியை வைத்து, 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இது குறித்து பர்கூர் போலீசார் விசாரித்து, தமிழ்செல்வி, அவரது கணவர் நாகப்பன் ஆகியோரை திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரில் பதுங்கியிருந்தபோது, அவர்களை கைது செய்தனர்.