/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழையில் தென்னை மரம் விழுந்து பசுமாடு இறப்பு
/
மழையில் தென்னை மரம் விழுந்து பசுமாடு இறப்பு
ADDED : ஏப் 14, 2025 07:18 AM
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், அவ்வப்போது மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் மானாவாரி சாகுபடி செய்ய, உழவு பணியை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில், மாவட்டத்தில் ஆங்காங்கு பரவலாக மழை பெய்தது. தேன்கனிக்கோட்டை கனரா வங்கி பின்புறம் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர், தனக்கு சொந்தமான பசு மாட்டை அப்பகுதியில் கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், தென்னை மரம் சாய்ந்து மாட்டின் மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே மாடு இறந்தது. தேன்கனிக்கோட்டை வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

