/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மோசமான நிலையில் தர்கா சந்திராம்பிகை ஏரி சாக்கடை நீர் கலப்பு; ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு

ADDED : மார் 18, 2024 03:43 AM
ஓசூர்: ஓசூரிலுள்ள, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், தர்கா சந்திராம்பிகை ஏரி உள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ள இந்த ஏரியில், சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. மேலும், ஆகாய தாமரை செடி ஏரி முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. நீர்வளத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதால், ஏரி மாசடைந்து வருகிறது. மேலும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவையினங்கள் ஆண்டுதோறும் வந்து செல்லும் இந்த ஏரியில், தண்ணீர் மாசடைந்து, ஆகாய தாமரையும் ஆக்கிரமித்துள்ளதால், பறவைகளின் வருகை மெல்ல, மெல்ல குறைந்து விட்டது.
தர்கா சந்திராம்பிகை ஏரியில் படகு இல்லம், படகு போக்குவரத்து அமைத்து அழகுப்படுத்த, 2011 ல் மாவட்ட கலெக்டராக இருந்த மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்தார். 13 ஆண்டுகள் கடந்த நிலையில, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. ஏரியில் தொடர்ந்து கழிவுநீர் கலப்பது மற்றும் கெட்டுபோன உணவு, இறைச்சி கழிவுகள் ஏரிக்கரையில் கொட்டப்படுவதால், தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. ஓசூர் ராமநாயக்கன் ஏரியை அழகுப்படுத்துவதை போல், தர்கா சந்திராம்பிகை ஏரியையும் மாவட்ட நிர்வாகம் அழகுப்படுத்தி, படகு இல்லம் அமைக்க, ஓசூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.