/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பட்டு வளர்ச்சித்துறை சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
பட்டு வளர்ச்சித்துறை சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பட்டு வளர்ச்சித்துறை சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பட்டு வளர்ச்சித்துறை சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 15, 2025 01:12 AM
கிருஷ்ணகிரி, தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில், பட்டு வளர்ச்சித்துறை சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரி பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட கிளைத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார். பட்டு வளர்ச்சித்துறை அமைச்சு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சிவசங்கரன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். வட்ட பொருளாளர் ஜெயராஜ் நன்றி கூறினார்.
பட்டுவளர்ச்சித்துறை சங்க மாநில துணைத்தலைவர் ராஜ்குமார் பேசுகையில்,''கடந்த சில ஆண்டுகளாக பட்டு வளர்ச்சி துறைக்கு சொந்தமான நிலங்களை மற்ற துறைகளின் பயன்பாட்டிற்கு வழங்கி வருவது, பட்டு வளர்ச்சித்துறையின் வளர்ச்சிக்கும், பட்டு விவசாயிகளின் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு ஊத்தங்கரை பட்டுப்பண்ணையில் இருந்து, 2 ஏக்கர் நிலமும், குன்னுாரில், 6 ஏக்கர் நிலமும் பிறதுறை பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாதஹள்ளி பட்டுப் பண்ணையில் இருந்து, 744 ஏக்கர் நிலம் வருவாய்த்துறை, சென்ட்ரல் நில வங்கியில் எடுத்து வைத்துள்ளது. எனவே, பட்டு வளர்ச்சித்துறைக்கு சொந்தமான நிலங்களை பாதுகாப்பதோடு மட்டுமின்றி, புதிய திட்டங்களை வகுத்து போதிய நிதி ஒதுக்கி, அந்நிலங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்,'' என்றார்.