/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாமந்தி தோட்டத்தில் பூச்சி கட்டுப்படுத்தும் முறை செயல்விளக்கம்
/
சாமந்தி தோட்டத்தில் பூச்சி கட்டுப்படுத்தும் முறை செயல்விளக்கம்
சாமந்தி தோட்டத்தில் பூச்சி கட்டுப்படுத்தும் முறை செயல்விளக்கம்
சாமந்தி தோட்டத்தில் பூச்சி கட்டுப்படுத்தும் முறை செயல்விளக்கம்
ADDED : ஏப் 19, 2025 01:46 AM
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள சாமந்தி தோட்டங்களில், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்த செயல்விளக்க முகாம் நடந்தது.
மதுரை அரசு வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர் அன்புமணி தலைமையிலான மாணவர்கள், சாமந்தி செடிகளை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும், சூரிய சக்தியில் இயங்கும் ஒளிப்பொறி எவ்வாறு பயன்படுகிறது என, விவசாயிகளுக்கு செயல்
விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர். சூரிய ஒளியில் பூச்சிகள் கவரப்பட்டு, பொறியின் அடிப்பகுதியில் உள்ள திரவத்தில் விழுந்து இறந்து விடும்.
இதன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை குறைத்து, இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என மாணவர்கள் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினர்.