/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.4.80 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்
/
ரூ.4.80 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்
ADDED : ஜூலை 29, 2025 01:24 AM
ஓசூர், ஓசூர் ஒன்றியம், பேகேப்பள்ளி கிராமத்தில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி, முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், மடிவாளம் முதல் பெரிய எலசகிரி வரை, 28.57 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை பணி, ஓசூர் பாகலுார் சாலையிலிருந்து, இனப்பசந்திரம் வரை, 21.92 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாகலுார் - சர்ஜாபுரம் சாலையிலிருந்து, ஈச்சங்கூர் கிராமம் வரை, சின்ன தின்னா முதல் பெரிய தின்னா வரை, முகலப்பள்ளி முதல் சானமங்கலம் வரை, எலுவப்பள்ளி கேட் முதல், அக்கிராம எல்லை வரை, சத்தியமங்கலம் முதல் முனீஸ்வரர் நகர் வரை, மூலதன முதலீட்டுக்கான மாநிலங்களுக்கான சிறப்பு நிதியிலிருந்து, 2.52 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலைகள், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் நந்திமங்கலத்தில் சிமென்ட் சாலை, கழிவு நீர் கால்வாய், பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணிகளை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். ஓசூர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோபால், முன்னாள் பஞ்., தலைவர் சாந்தா வீரபத்திரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.