/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முருகருக்கு கோவில் கட்ட பக்தர்கள் கோரிக்கை
/
முருகருக்கு கோவில் கட்ட பக்தர்கள் கோரிக்கை
ADDED : அக் 09, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகருக்கு கோவில் கட்ட
பக்தர்கள் கோரிக்கை
ஓசூர், அக். 9-
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி துரைஏரி அருகில், 500 ஆண்டு பழமையான ஆறுமுகம் கொண்ட முருகர் கோவில் உள்ளது. இக்கோவிலை யாரும் பராமரிக்காததால், கோவில் இடிந்து முருகன் சிலை மட்டும் அரச மரத்தடியில் உள்ளது. அதன் கீழ் பகுதியில் குளம் ஒன்று உள்ளது.
அப்பகுதியை சுற்றியுள்ள முருக பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இடிந்துள்ள ஆறுமுகம் கொண்ட முருகர் கோவிலை, சூளகிரி பொதுமக்கள் மீண்டும் புதிதாக கட்ட வேண்டும் என, முருக பக்தர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

