/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கார்த்திகை மாதம் பிறப்பு சபரிமலை யாத்திரைக்கு மாலையணிந்த பக்தர்கள்
/
கார்த்திகை மாதம் பிறப்பு சபரிமலை யாத்திரைக்கு மாலையணிந்த பக்தர்கள்
கார்த்திகை மாதம் பிறப்பு சபரிமலை யாத்திரைக்கு மாலையணிந்த பக்தர்கள்
கார்த்திகை மாதம் பிறப்பு சபரிமலை யாத்திரைக்கு மாலையணிந்த பக்தர்கள்
ADDED : நவ 17, 2024 02:17 AM
கிருஷ்ணகிரி, நவ. 17-
கார்த்திகை மாதம் துவக்க நாளில் மாலையணிந்து விரதம் மேற்கொண்டு, சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு பக்தர்கள் செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை, 5:00 மணிக்கு கிருஷ்ணகிரி - சேலம் சாலையிலுள்ள ஐயப்பன் கோவிலில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்தனர். கோவிலில் குருசாமிகள், பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தனர்.
மாலையணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள், தினமும் காலை, மாலை நேரங்களில் நீராடி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வர். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி, விரதம் மேற்கொள்வர். இதையொட்டி, ஐயப் பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன. நேற்று, 600க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலையணிந்து கொண்டனர். கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவிலில், 37ம் ஆண்டு மண்டல பூஜை வருகிற டிச., 20 முதல், 26 வரை நடக்கிறது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 2025ம் ஜன., 1ல், சிறப்பு பூஜைகள் மற்றும் விசேஷ வழிபாடுகள் நடக்கவுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.