/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரேஷன் கார்டு பெறும் பொது மக்கள் திணறல் :இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகரிப்பு
/
ரேஷன் கார்டு பெறும் பொது மக்கள் திணறல் :இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகரிப்பு
ரேஷன் கார்டு பெறும் பொது மக்கள் திணறல் :இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகரிப்பு
ரேஷன் கார்டு பெறும் பொது மக்கள் திணறல் :இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகரிப்பு
ADDED : ஆக 05, 2011 12:47 AM
ஓசூர்: ஓசூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் இடைத்தரர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், ரேஷன்கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ளவும், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கவும் முறையாகவும், நேரடியாகவும் விண்ணப்பிக்கும் பொதுமக்கள் மனுக்கள் மீது வட்ட வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
ஓசூர் தாலுகா அலுவலகத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ஓசூர் தாசில்தார் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் செயல்படுகிறது. வட்ட வழங்கல் அலுவலராக வரலட்சுமி பணியில் உள்ளார். இங்கு ரேஷன்கார்டுகளில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், நீக்கல் மற்றும் சேர்த்தல், வீட்டு எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதோடு முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்படுகிறது. இந்த அலுவலகத்தில் தினம் காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் பொதுமக்கள் பல்வேறு பயன்கள் நிமித்தம் காத்து கிடக்கின்றனர். வட்ட வழங்க அதிகாரிகள், முறையாக இவர்களுடைய விண்ணப்பங்களை பெற்று அவர்களுடைய குறைகளையும், திருத்தங்களையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. பொதுமக்கள் நேரடியாக வட்ட வழங்கல் அலுவலகத்தில் வழங்கப்படும் எந்த விண்ணப்பங்கள் மீதும் வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை எடுப்பதில்லை. வட்ட வழங்கல் அலுவலக வளாகத்தில் விண்ணப்பங்களை நிரபம்பி கொடுப்போர் போர்வையில் செயல்படும் இடைத்தரர்கள் வழியாக வழங்கப்படும் விண்ணப்பங்கள் மீது மட்டும் வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கு தகுந்த ஆவணங்களுடன் பொதுமக்கள் நேரடியாக வட்ட வழங்கல் அலுவலகத்தில் வழங்கும் விண்ணப்ப மனுக்கள் புறக்கணிக்கப்படுகிறது. இதே போல் பலமுறை தொடர்ந்து விண்ணப்ப மனுக்களை வழங்கினாலும் வட்ட வழங்கல் அலுவலர் சம்பந்தப்பட்ட விண்ணப்ப மனுக்களுக்கு புதிய ரேஷன்கார்டுகள் வழங்குவதில்லை. அதே நேரத்தில் ஒரு புதிய ரேஷன்கார்டுக்கு, 3,000 ரூபாய் வீதம் மாமூல் கொடுத்து இடைத்தரர்கள் வழியாக வரும் விண்ணப்பங்களுக்கு உடனடியாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. முகவரி மாற்றம், பெயர் மாற்றம், கடை மாற்றம் மற்றும் பெயர் நீக்கல், சேர்த்தல் உள்ளிட்ட மாற்றம் செய்வதற்கும், 500 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை பெறப்படுகிறது. ரேஷன் கார்டு தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் பதில் அளிக்காமல் விரட்டியடிக்கின்றனர். வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணம் இல்லாமல் வழங்கும் விண்ணப்ப மனுக்கள் பெயரளவுக்கு மட்டும் பெறப்படுகிறது. அந்த மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. சமீப காலமாக பொதுமக்கள் வட்ட வழங்கல் அலுவலதத்தில் நடமாடும் இடைத்தரர்கள் வழியாக விண்ணப்ப மனுக்களை வழங்குகின்றனர். இடைத்தரர்கள், ஒரு சிலருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வாங்கி கொடுக்கின்றனர். கிராமத்தில் வரும் விழிப்புணர்வு இல்லாத பொதுமக்களை இடைத்தரகர்கள் பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், ஓசூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் இடைத்தரர்கள் ஆதிக்கத்தால் நிலவும் அவலத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.