/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொதுமக்களுக்கு 'மஞ்சப்பை' வழங்கல்
/
பொதுமக்களுக்கு 'மஞ்சப்பை' வழங்கல்
ADDED : ஆக 12, 2024 06:39 AM
ஓசூர்: ஓசூரில், உழவர் சந்தைக்கு வந்தவர்களுக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், 'மஞ்சப்பை'களை இலவசமாக வழங்கினார்.கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, மீண்டும் 'மஞ்சப்பை' மற்றும் மரக்கன்று வழங்கும் விழா நேற்று காலை நடந்தது.
சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இலவசமாக, 'மஞ்சப்பை' மற்றும் மரக்கன்றுகளை வழங்கி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலும் தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க கேட்டுக்கொண்டார்.மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் செந்தில்குமார், உழவர் சந்தை அலுவலர் சுமித்தா, தி.மு.க., இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், பகுதி செயலாளர் ராமு உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, சீத்தாராம்மேட்டில், தி.மு.க., மாவட்ட அமைப்புசாரா ஓட்டுவர் அணி சார்பில், ஆட்டோ ஸ்டாண்டில் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா பெயர் பலகையை, மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.