/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட தி.மு.க., - பா.ஜ.,வினர் முயற்சி
/
போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட தி.மு.க., - பா.ஜ.,வினர் முயற்சி
போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட தி.மு.க., - பா.ஜ.,வினர் முயற்சி
போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட தி.மு.க., - பா.ஜ.,வினர் முயற்சி
ADDED : செப் 13, 2024 07:03 AM
ஓசூர்: ஓசூர் அடுத்த கொத்துாரை சேர்ந்த லட்சுமணன் சில நாட்களுக்கு முன், தின்னுார் சாலையில் டிப்பர் லாரியை ஓட்டி சென்றபோது, அவ்வழியாக தேர்ப்பேட்டையை சேர்ந்த, தி.மு.க., மாநகர கிழக்கு பகுதி செயலாளர் ராமு, அவரது அண்ணன் நாகராஜ் வந்த கார் மீது லேசாக மோதினார். ராமு டிப்பர் லாரி சாவியை எடுத்து சென்றார். அதை வாங்கச்சென்ற லட்சுமணன் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட, 4 பேரை, ராமு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கினர். கடந்த, 10-ல் ஓசூர் டவுன் போலீசார், ராமு உள்ளிட்ட, 4 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிந்தனர்.
இதை ரத்து செய்யக்கோரி நேற்று, ஓசூர் மேற்கு மாவட்ட, பா.ஜ., மாவட்ட தலைவர் நாகராஜ், தி.மு.க.,வை சேர்ந்த, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட, தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், டவுன் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட முயன்றனர்.ஏ.டி.எஸ்.பி., சங்கர், இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து சமாதானம் செய்தனர்.பா.ஜ., மாவட்ட தலைவர் நாகராஜ், 'ஜாதி சண்டை எங்கள் ஊரில் வந்தது இல்லை. சிறிய அடிதடிக்காக வன்கொடுமை வழக்கு பதிந்தது தவறு. இதை ரத்து செய்ய வேண்டும்' என்றார். ஏ.டி.எஸ்.பி., சங்கர், வழக்கு மட்டும் பதிந்துள்ளோம். விசாரணைக்கு பிறகுதான் நடவடிக்கை எடுப்போம் என்றதால், அனைவரும் கலைந்து சென்றனர்.

