/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் நாளை தி.மு.க., கிழக்கு மாவட்ட அவசர செயற்குழு
/
கிருஷ்ணகிரியில் நாளை தி.மு.க., கிழக்கு மாவட்ட அவசர செயற்குழு
கிருஷ்ணகிரியில் நாளை தி.மு.க., கிழக்கு மாவட்ட அவசர செயற்குழு
கிருஷ்ணகிரியில் நாளை தி.மு.க., கிழக்கு மாவட்ட அவசர செயற்குழு
ADDED : பிப் 26, 2024 02:11 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நாளை (பிப். 27) கிழக்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது.
இது குறித்து கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் தட்ரள்ளி நாகராஜ் தலைமையில், நாளை (பிப்.27) காலை, 10:00 மணிக்கு டோல்கேட் அருகில் உள்ள ஸ்ரீதேவராஜா திடலில் நடக்க உள்ளது. முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர்.
இக்கூட்டத்தில், கடந்த, 23ல் காணொலி காட்சி மூலம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் வழங்கிய ஆலோசனைகளை குறித்து விவாதிப்பது. வரும் மார்ச், 1ல் தமிழக முதல்வர் பிறந்த நாள் குறித்து ஆலோசனை வழங்குவது. நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
எனவே, தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள், பாக முகவர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றியக்குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

