/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்க கி.கிரி கிழக்கு மாவட்ட செயலர் வேண்டுகோள்
/
தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்க கி.கிரி கிழக்கு மாவட்ட செயலர் வேண்டுகோள்
தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்க கி.கிரி கிழக்கு மாவட்ட செயலர் வேண்டுகோள்
தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்க கி.கிரி கிழக்கு மாவட்ட செயலர் வேண்டுகோள்
ADDED : ஜன 20, 2024 09:42 AM
கிருஷ்ணகிரி: சேலத்தில் நடைபெறும், இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டிற்கு வரும் இளம் ரத்தங்களை வரவேற்க அணி திரண்டு வாரீர் என, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: எல்லோர்க்கும் எல்லாம், சமூக நீதி கொள்கையுடன் பெண்ணடிமையை ஒழித்து புதிய சரித்திரத்தை படைத்து வருவது தி.மு.க., கடந்த, 74 ஆண்டுகளாக ஆதிக்கவாதம், மதவாதத்திற்கு எதிராக நாம் துாக்கிய போர்க்கொடிதான் இன்று திராவிட மாடல் ஆட்சியாக, இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1981ல், 'ஆத்துாரில் ஈ.வெ.ரா சிலையை திறந்து வைத்து பேசுகையில், ஒரு கட்சியை வளர்த்தவர்கள், இளைஞர்களை வரவேற்று, அரவணைக்க வேண்டும். அப்படி வருகின்ற புதிய ரத்தங்களை அரவணைத்து இளைய தலைமுறையினருடைய உள்ளங்களிலே இயக்கத்தினுடைய லட்சியங்களை பதியவைக்க வேண்டும்' என்றார்.
தற்போது சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தி.மு.க., இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை துவங்குகிறது. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, இளைஞரணி செயலர் உதயநிதி தலைமையில் நடக்கும் மாநாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள், இண்டியா கூட்டணியின் நாடாளுமன்ற வெற்றி, தி.மு.க., கொள்கை பரப்புரை உள்ளிட்டவை நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். வெள்ளை சீருடையில் அணி திரண்டு வரும் இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்களை வரவேற்க அணி திரண்டு வாரீர். தமிழகத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்க.இவ்வாறு தெரிவித்துள்ளார்.