/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு தி.மு.க., நிர்வாகி இடையூறு
/
மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு தி.மு.க., நிர்வாகி இடையூறு
மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு தி.மு.க., நிர்வாகி இடையூறு
மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு தி.மு.க., நிர்வாகி இடையூறு
ADDED : அக் 09, 2025 03:00 AM

ஓசூர்: ஓசூரில், மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையம் முன், காரை நிறுத்தி இடையூறு செய்யும், தி.மு.க., நிர்வாகி மீது, நடவடிக்கை எடுக்க, போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தின்னுார் அருகே, லட்சுமி நரசிம்மர் நகர், 2வது குறுக்கு தெருவில், தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தையல், 'எம்ராய்டரி ஒர்க்' போன்றவை, கடந்த மே மாதம் முதல் இலவசமாக தனியார் கட்டடத்தில் கற்று தரப்படுகிறது.
இம்மையத்தின் வாசலில், அப்பகுதியில் வசிக்கும், தி.மு.க., - முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், மாவட்ட பிரதிநிதியுமான ரமேஷ், அவரது காரை நிறுத்தி வருகிறார்.
இதனால் மாற்றுத்திறனாளிகள், மையத்திற்கு செல்ல முடியாமல் தவிப்பதாக கூறி, கலெக்டர், எஸ்.பி., ஆகியோருக்கு, தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் மூலமாக புகார் அளிக்கப்பட்டது.
ஆனால், ரமேஷ், தி.மு.க., நிர்வாகி என்பதால், மத்திகிரி போலீசாரும் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.