/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பாசறை கூட்டம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பாசறை கூட்டம்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பாசறை கூட்டம்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பாசறை கூட்டம்
ADDED : ஜூன் 30, 2025 03:39 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதிக்கு உட்-பட்ட ஓசூர் மாநகரம், சூளகிரி வடக்கு மற்றும் ஓசூர் ஒன்றியம் சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர்கள் சேர்க்கைக்-கான பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செய-லாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
தகவல் தொழில்நுட்ப அணி, மாநில துணை ஒருங்கிணைப்-பாளர் இசை, தகவல் தொழில்நுட்ப முகவர்கள் மற்றும் ஓட்டுச்சா-வடி முகவர்களுக்கு, உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி அளித்தார்.அதேபோல், தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தளி வடக்கு, தெற்கு, அஞ்செட்டி மற்றும் கெலமங்கலம் மேற்கு ஒன்-றியம், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூர் சார்பில், தேன்கனிக்கோட்டை சப்தகிரி திருமண மண்டபத்தில், மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமையில் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமாரன், மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, தொகுதி பார்வையா-ளர்கள் ஓசூர் வடிவேல், தளி ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.