/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிராம தேவதை மாரியம்மனுக்கு வெள்ளி கவசம்:காணிக்கையாக வழங்கிய தி.மு.க.,- எம்.எல்.ஏ.,

ADDED : செப் 28, 2025 02:05 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுாரில், கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் அம்மன் மற்றும் இதர தெய்வங்களுக்கு, வெள்ளிக்கவசம் செய்து கொடுக்குமாறு, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷிடம், பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதையேற்று, தன் சொந்த செலவில் வெள்ளிக் கவசம் அணிவிப்பதாக, எம்.எல்.ஏ., உறுதியளித்தார். அதை நிறைவேற்றும் வகையில், 3 வெள்ளி கவசம் செய்து அதை அம்மனுக்கு அணிவிக்க மேள, தாளங்கள் முழங்க எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று முன்தினம் கொண்டு வந்தார்.
கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, வெள்ளி கவசங்கள் அம்மன் மற்றும் இதர தெய்வங்களுக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, எம்.எல்.ஏ., பிரகாஷ், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். தி.மு.க., மேற்கு மாவட்ட பொருளாளர் சுகுமாரன், துணை மேயர் ஆனந்தய்யா, ஒன்றிய செயலர்கள் கஜேந்திரமூர்த்தி, நாகேஷ், லோகேஷ் ரெட்டி, ராமமூர்த்தி, கிரசர் ஓனர்ஸ் பெடரேஷன் இணை செயலர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.