ADDED : ஏப் 20, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி அடுத்த, செல்லம்பட்டி கூட்ரோடு பகுதியில், தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. இதில் பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், போச்சம்பள்ளி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, சரவணன், அம்மன்ராஜா, தம்பிதுரை, சங்கர், இளையராஜா உள்ளிட்ட, பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் மத்துார் ஒன்றியம், சிவம்பட்டியில், தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில், பர்கூர் எம்.எல்.ஏ., மதியழகன், செயற்குழு உறுப்பினர் செந்தில், ஒன்றிய செயலாளர் வசந்தரசு, சங்கர், விஜியலட்சுமி பெருமாள், சரவணன், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

