/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்
/
தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்
ADDED : நவ 13, 2025 03:02 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, தி.மு.க., வடக்கு ஒன்-றியம் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், பாம்பாறு டேம் பகுதியில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, விவசாய தொழி-லாளர் அணி மாவட்ட அமைப்பாளர் சத்திய நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ஓட்டுச்சாவடி முகவர்கள் எஸ்.ஐ.ஆர்., படிவங்களை உரிய வாக்காளர்களிடம் சேர்த்தல், படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து முகவர்களுக்கு, பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், ஒன்றிய பூத் கமிட்டி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்-டனர்.

