/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் தி.மு.க., கருத்தரங்குமாநகர செயலாளர் அறிக்கை
/
ஓசூரில் தி.மு.க., கருத்தரங்குமாநகர செயலாளர் அறிக்கை
ஓசூரில் தி.மு.க., கருத்தரங்குமாநகர செயலாளர் அறிக்கை
ஓசூரில் தி.மு.க., கருத்தரங்குமாநகர செயலாளர் அறிக்கை
ADDED : ஏப் 20, 2025 01:25 AM
ஓசூர்:ஓசூர் மாநகர, தி.மு.க., செயலாளரும், மாநகர மேயருமான சத்யா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ஓசூர் மாநகர, தி.மு.க., சார்பில், ஓசூர் - பாகலுார் சாலையிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், இன்று மாலை, 5:00 மணிக்கு மாபெரும் கருத்தரங்கம் நடக்கிறது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகிறார்.
திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் மற்றும் பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். எனவே, ஓசூர் மாநகரத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட, மாநகர, பகுதி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத்தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னாள், இன்னாள் கவுன்சிலர்கள், பாக முகவர்கள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.