/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அறிவுசார் மையத்திற்கு புத்தகங்கள் வழங்கல்
/
அறிவுசார் மையத்திற்கு புத்தகங்கள் வழங்கல்
ADDED : ஜூலை 26, 2025 12:53 AM
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள அறிவுசார் மையத்தில், புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் சார்பில் நடந்தது.
பேரூராட்சி தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரவிசங்கர், கெரிகப்பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி, வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் பிரபாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆடிட்டர் லோகநாதன் சேகர் வரவேற்றார். அறிவு சார் மையத்தில் படிக்கும் மாணவர்கள், வாசகர்கள் நன்மைக்காக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள், குரூப் தேர்விற்கு தேவையான புத்தகங்கள் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை, ஊத்தங்கரை சார் பதிவாளர் மோனிகா, அறிவுசார் பொறுப்பாளர்கள் சரஸ்வதி, மனோஜ், சதாம் ஆகியோரிடம் வழங்கினார்.
கவுன்சிலர்கள் கதிர்வேல், ஸ்ரீராமன், விஜயகுமார், ஆசிரியர்கள் சந்தோஷ், வேலுசாமி, அப்துல் கலாம் அகாடமி ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.