/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் கொண்டாட்டம்
/
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : செப் 05, 2025 01:21 AM
கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ஆனேகொள்ளு பஞ்., உட்பட்ட தொட்டபேளூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசுலு முன்னிலையில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர், ராதாகிருஷ்ணன் உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
* கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் நளினி வரவேற்றார். நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், சி.இ.ஓ., (பொ) முனிராஜ் ஆகியோர், ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். தொடர்ந்து, பள்ளியில் பணிபுரியும், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 25 அலுவலக பணியாளர்கள் என, 125 பேருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.