/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிரைவரை எரித்து கொன்ற சம்பவம் மொபைல் டவரை வைத்து விசாரணை
/
டிரைவரை எரித்து கொன்ற சம்பவம் மொபைல் டவரை வைத்து விசாரணை
டிரைவரை எரித்து கொன்ற சம்பவம் மொபைல் டவரை வைத்து விசாரணை
டிரைவரை எரித்து கொன்ற சம்பவம் மொபைல் டவரை வைத்து விசாரணை
ADDED : மார் 05, 2025 08:24 AM
கிருஷ்ணகிரி: வேன் டிரைவர் கொலையில், அவரது மொபைல் அழைப்புகள், மொபைல் டவரை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அடுத்த பெரியதக்கேப்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திக், 30, வேன் டிரைவர். போத்திநாயனப்பள்ளியிலுள்ள இவரது விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். கடந்த, 1ம் தேதி இரவு விவசாய நிலத்தில் தங்கியிருந்த அவர், மறுநாள் காலையில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். அருகிலிருந்த கொள்ளு பயிரும், தீ வைத்து எரிக்கப் பட்டிருந்தது. மகாராஜகடை போலீசார் சடலத்தை மீட்டு, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரித்தனர்.
இதில், கார்த்திக்கை தலையில் அரிவாளால் வெட்டி கொன்றதும், அவர் இறந்த பிறகு உடலை தீ வைத்து எரித்ததும் தெரியவந்தது. கொலை நடந்த பகுதியில், 'சிசிடிவி' கேமராக்களில் காட்சி பதிவுகள் எதுவும் இல்லை. அதனால், கார்த்திக்கிற்கு வந்த மொபைல் அழைப்புகள், அவற்றின் மொபைல் டவர்களை வைத்து, போலீசார் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.