/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழையின்றி காய்ந்த மா மரங்கள்: வேளாண் விஞ்ஞானிகள் பார்வை
/
மழையின்றி காய்ந்த மா மரங்கள்: வேளாண் விஞ்ஞானிகள் பார்வை
மழையின்றி காய்ந்த மா மரங்கள்: வேளாண் விஞ்ஞானிகள் பார்வை
மழையின்றி காய்ந்த மா மரங்கள்: வேளாண் விஞ்ஞானிகள் பார்வை
ADDED : மே 07, 2024 07:15 AM
கிருஷ்ணகிரி : கிஷ்ணகிரி மாவட்டத்தில், மழையின்றி கடும் வறட்சி நிலவும் நிலையில், மா மரங்கள் காய்ந்து வருவதால், டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு சென்று, மா மரங்களுக்கு ஊற்றி காப்பாற்ற, அனுமதிக்க வேண்டும்.
காய்ந்த மரம் ஒன்றுக்கு, 5,000 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி, தோட்டக்கலை உதவி இயக்குனர் சரவணன் தலைமையில், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய தலைவரும் விஞ்ஞானியுமான சுந்தர்ராஜன் ஆகியோர் நேற்று காவேரிப்பட்டணம் அருகே காய்ந்து போன மா மரங்களை பார்வையிட்டனர். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் உடனிருந்தார்.