/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர் கூட்டம்
/
கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர் கூட்டம்
கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர் கூட்டம்
கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர் கூட்டம்
ADDED : ஏப் 14, 2025 07:18 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், நகர செயலாளர் கேசவன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
காவேரிப்பட்டணம் நகர, அ.தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் விமல் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார். ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, மாவட்ட விவசாய அணி செயலாளர் மோகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கீதா கேசவன் உள்பட பலர் பங்கேற்றனர்.