ADDED : ஜூலை 24, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, ராசி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 62. இவர் நேற்று முன்தினம் மாலை தன் டி.வி.எஸ்., ஜூபிட்டர் பைக்கில், அதே பகுதியில் பால் வாங்க சென்றார். அப்போது போச்சம்பள்ளி, பழனி ஆண்டவர் நகரை சேர்ந்த பிரதாப், 19, மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரின் நண்பர் நவீன்குமார், 18, இருவரும் ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில், அதிவேகமாக வந்து,
கிருஷ்ணமூர்த்தி சென்ற வாகனத்தின் மீது மோதினர். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

