/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி
/
மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி
ADDED : மே 04, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கெங்கப்பிராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமன், 65. நேற்று முன்தினம் இரவு காற்றுடன் மழை பெய்தது.
அப்போது, 9:30 மணிக்கு வீட்டின் அருகே உள்ள மின்கம்பி அறுந்து, முருங்கை மரம் மீது விழுந்துள்ளது. அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் சென்ற ராமன் மீது, மின்சாரம் பாய்ந்தது.
அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.