/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் ஓட்டளிக்க செல்லாத மக்கள்
/
தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் ஓட்டளிக்க செல்லாத மக்கள்
தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் ஓட்டளிக்க செல்லாத மக்கள்
தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் ஓட்டளிக்க செல்லாத மக்கள்
ADDED : ஏப் 19, 2024 01:49 PM
ஓசூர்: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் உள்ள வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ராயக்கோட்டை அருகே உள்ள கடவரஹள்ளி கிராமத்தில் சாலை வசதி மற்றும் வீட்டுமனை பட்டா வழங்காத காரணத்தால் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். மதியம் 12:30 முப்பது மணிக்கு மேலாகியும் வாக்காளர்கள் யாரும் ஓட்டளிக்க செல்லவில்லை. பூத் ஏஜெண்டுகளும் பூத்தில் இல்லை. அதை போல் கருக்கனஹள்ளி கிராமத்திலும் மக்கள் தேர்தல் புறக்கணிப்பை ஈடுபட்டுள்ளனர். இதுவரை மக்கள் யாரும் சென்று ஓட்டளிக்கவில்லை. அதிகாரிகள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மேலும் தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தொழுவபெட்டா மற்றும் குல்லட்டி ஆகிய வாக்குச்சாவடிகளில் 1031 ஓட்டுகள் உள்ளன. வனப்பகுதிக்கு நடுவே சாலை அமைத்து கொடுக்காத காரணத்தால் இக்கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதுவரை யாரும் ஓட்டளிக்க முன் வரவில்லை. குந்துக்கோட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வீரசெட்டி ஏரி ஓட்டுச்சாவடியில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பையில் ஈடுபட்டுள்ள நிலையில் மூன்று ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

