ADDED : மே 06, 2025 01:50 AM
கெலமங்கலம்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா நான்கு நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று காலை தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்பாக திருவிழாவை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், தேன்கனிக்கோட்டை தாசில்தார் கங்கை, டி.எஸ்.பி., ஆனந்தராஜ் ஆகியோர் தலைமையில் கெலமங்கலத்தில் நேற்று நடந்தது, பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தேர் கமிட்டியினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழா சிறப்பாக நடக்க போலீசார் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்
துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, டி.எஸ்.பி., ஆனந்தராஜ் கேட்டுக்கொண்டார்.
உரிய பாதுகாப்பு வழங்குமாறும், பக்தர்கள் இடையூறு இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தர வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கெலமங்கலம் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, எஸ்.ஐ., சிற்றரசு, வருவாய் ஆய்வாளர் முனியப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.