/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ஜ., கூட்டணியில் இ.பி.எஸ்., தான் முதல்வர் வேட்பாளர்; கே.பி.ராமலிங்கம்
/
பா.ஜ., கூட்டணியில் இ.பி.எஸ்., தான் முதல்வர் வேட்பாளர்; கே.பி.ராமலிங்கம்
பா.ஜ., கூட்டணியில் இ.பி.எஸ்., தான் முதல்வர் வேட்பாளர்; கே.பி.ராமலிங்கம்
பா.ஜ., கூட்டணியில் இ.பி.எஸ்., தான் முதல்வர் வேட்பாளர்; கே.பி.ராமலிங்கம்
ADDED : நவ 18, 2025 01:36 AM
கிருஷ்ணகிரி, ''தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியில், இ.பி.எஸ்., தான் முதல்வர் வேட்பாளர்,'' என, பா.ஜ-., மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.
கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி, பா.ஜ., ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் மாநாடு கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாவட்ட தலைவர் கவியரசு தலைமை வகித்தார். மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், மாநில செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சிக்கு பின், பா.ஜ., மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:
பீஹார் தேர்தலில், பா.ஜ., 90 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதில், 15 தொகுதிகளில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம். அங்குள்ள, 12 தொகுதிகளில் இஸ்லாமிய பெண்கள் ஓட்டுச்சாவடிகளில், 80 சதவீத வாக்குகள், பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. எனவே, 15 தொகுதிகளிலும், பா.ஜ., வெற்றிக்கு இஸ்லாமிய பெண் வாக்காளர்கள் காரணம். வரும், 2026 தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ,., கூட்டணியில் முதல்வர் வேட்பாளர், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்.,தான். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, இந்தியாவின் தலைமை எங்களின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் இ.பி.எஸ்.,
இவ்வாறு, அவர் பேசினார்.
மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் நரேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், ஹஜ் கமிட்டி தேசிய குழு துணை தலைவர் முனவரி பேகம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சிவப்பிரகாசம், நாகராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

