/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டம்
/
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டம்
ADDED : நவ 18, 2025 01:36 AM
தேன்கனிக்கோட்டை, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், வரும் டிச., 28ல், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, விவசாயிகள் உரிமை மீட்பு மற்றும் கடன் விடுதலை மாநாடு நடக்க உள்ளது. இதற்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விவசாயிகளை அழைக்கும் வகையில், தளி அருகே, மதகொண்டப்பள்ளியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி தலைமை வகித்தார். நிறுவனர் ஈசன் முருகசாமி, மாநாட்டின் நோக்கம், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் மாநாட்டில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திலிருந்து, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் முத்துலட்சுமி, மாநில நுகர்வோர் அணி ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட அவைத்தலைவர் ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

