/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இன்று முதல் எஸ்.ஐ.ஆர்., பணி புறக்கணிப்பு வருவாய்த்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ADDED : நவ 18, 2025 01:35 AM
கிருஷ்ணகிரி, இன்று முதல், எஸ்.ஐ.ஆர்., பணிகளை புறக்கணிப்பதாக கூறி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எஸ்.ஐ.ஆர்., பணிகளை இன்று (நவ.18) முதல் முழுவதும் புறக்கணிப்பு செய்யும் வகையில் நேற்று மாலை,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் மற்றும் பெருந்திரள் முறையீடு நடந்தது. மாவட்ட தலைவர் சக்தி வேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், மாநில துணை செயலாளர் பெருமாள், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் பூபதி, நில அளவை சங்கம் பெரியசாமி, கிராம ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., பணிகளை நவ., 18 முதல் முற்றிலும் புறக்கணிப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.