ADDED : அக் 17, 2026 04:23 AM
கிருஷ்ணகிரி: தமிழ் சொற்கள் பிழை இல்லாமல் எழுதும் போட்டிக்கு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, கிருஷ் ணகிரி அன்பு குளோபல்பேமிலி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் உஷா அன்பு வெளியிட்டுள்ள அறிக்கை: எங்கள் அறக்கட்டளை சார்பில், பிழை இல்லாமல் தமிழ் சொற்கள் எழுதும் போட்டியும், பேச்சாற்றலை வளர்க்கும் வகையில் காந்தி ஜெயந்தியையொட்டி மகாத்மா காந்தி பற்றி நான் அறிந்தவை என்ற தலைப்பிலும் போட்டி நடைபெறும். 20 நிமிடங்களில், தமிழில் பிழையின்றி அதிக சொற்கள் எழுதுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு ஐந்து பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். பங்கேற்க விரும்புவோர் வரும், 20ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் முதல் மூன்று சிறந்த மாணவருக்கு பரிசு வழங்கப்படும். மேலும் விபரம் பெற, 94428 55089, 9788914721 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
