தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பலத்த மழையால் வயலில் சாய்ந்த நெற்கதிர்கள்

பலத்த மழையால் வயலில் சாய்ந்த நெற்கதிர்கள்

பலத்த மழையால் வயலில் சாய்ந்த நெற்கதிர்கள்


ADDED : அக் 17, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: மூங்கில்புதுார் கிராமத்தில், மழையால் நெற்கதிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில் மூங்கில் புதுார் கிராமத்தில், நெல் வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து, நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இது குறித்து அக்கிராமத்தை சேர்ந்த விவசாயி சக்திவேல் மற்றும் சிலர் கூறியதாவது:தென்பெண்ணை ஆறு மற்றும் கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். தற்போது நெற்கதிர்கள் முற்றிய நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, காற்றுடன் பெய்த மழையால், வயலில் இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. இதனால், ஏக்கர் ஒன்றுக்கு, 30,000 முதல், 40,000 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, உரிய இழப்பீட்டை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

2வது நாளாக மழை

நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மதியம் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்டது. மதியம், 1:30 மணிக்கு கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி பகுதிகளில் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்டில், இரண்டு அடி உயரத்திற்கு கழிவுநீருடன் மழை நீரும் தேங்கியதால், பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். எனவே, மழை காலங்களில் பஸ் ஸ்டாண்டில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக, கிருஷ்ணகிரியில், 40.40 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், கெலவரப்பள்ளி அணை, 40, பாம்பாறு அணை, 22, ஓசூர், 17.20, பாரூர், 10.80, அஞ்செட்டி, 10.20, ஊத்தங்கரை, 6.80, பெனுகொண்டாபுரம், 2.20, தேன்கனிக்கோட்டை, சூளகிரி, சின்னாறு அணை தலா, 2, போச்சம்பள்ளி, 1, என மொத்தம், 163.84 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us