/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பொறுப்பு தான் மாறியுள்ளதாக விளக்கம்
/
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பொறுப்பு தான் மாறியுள்ளதாக விளக்கம்
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பொறுப்பு தான் மாறியுள்ளதாக விளக்கம்
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பொறுப்பு தான் மாறியுள்ளதாக விளக்கம்
ADDED : ஜூன் 03, 2025 01:42 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலரை பொறுப்பிலிருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். இதில், பொறுப்புகள் தான் மாறி உள்ளதாக, நீக்கப்பட்டவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நிர்வாகிகள் சிலரை மாற்றியும், பொறுப்பிலிருந்து நீக்கியும் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளராக இருந்த தங்கமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர்.அணி இணைச்செயலாளர் மாதையன், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பெருமாள், மாவட்ட இலக்கிய அணி இணைச்செயலாளர் சுந்தரவடிவேலு ஆகியோர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர்., அணி இணைச்செயலாளராக இருந்த மாதையன், அம்மா பேரவை மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சில நாட்களுக்கு முன், அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. இதில் தம்பிதுரை எம்.பி., கலந்து கொண்டார். அப்போது, கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி ஆதரவாளர்கள் அங்கு
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, இ.பி.எஸ்., குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், பா.ஜ., மேலிடத்திலும் புகார் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பர்கூர் தொகுதியில் தம்பிதுரை எம்.பி., கட்சி நிகழ்ச்சி நடத்தும்போது, முனுசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்த தங்கமுத்து, தம்பிதுரை பக்கம் சாய்ந்ததால், அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இது குறித்து தங்கமுத்து கூறுகையில், ''என்னை கட்சியிலிருந்து நீக்கவில்லை. அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து, அம்மா பேரவை தலைவராக மாற்றியுள்ளனர். இதை பதவி உயர்வாக பார்க்கிறேன்,'' என்றார்.
கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., கூறுகையில், ''மாவட்ட செயலாளரின் வரம்பிற்கு உட்பட்டு சில நிர்வாகிகளை, பொதுச்செயலாளர் ஒப்புதலோடு மாற்றியுள்ளோம். இது உட்கட்சி விவகாரம், இதில் யாரும் சிண்டு முடிக்க தேவையில்லை,'' என்றார்.