/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துவரைக்கு மானியம் வழங்கவில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
/
துவரைக்கு மானியம் வழங்கவில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
துவரைக்கு மானியம் வழங்கவில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
துவரைக்கு மானியம் வழங்கவில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
ADDED : நவ 23, 2024 01:37 AM
துவரைக்கு மானியம் வழங்கவில்லை
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
கிருஷ்ணகிரி, நவ. 23-
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சரயு தலைமையில், நேற்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது.
இதில் விவசாயிகளின், கேள்விக்கு அதிகாரிகள் அளித்த பதில் விபரம்:
விவசாயி செந்தில்குமார்: துவரை மானியம் இதுவரை கிடைக்கவில்லை. வேளாண் துறை, விவசாயிகளுக்கு உதவி செய்ய மறுக்கிறது.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன்: பில் ஸ்கேன் செய்து அனுப்புவதில் தாமதம் ஆகிறது. விரைவில் பெற்று தரப்படும்.
அன்பழகன்: என்.தட்டக்கல் பள்ளி வளாகத்தில் குரங்குகள் தொல்லை அதிகம் உள்ளது.
மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி: விரைவில் கூண்டு வைத்து குரங்குகள் பிடிக்கப்படும்.
சிவகுரு: தமிழகத்தின் இரண்டாவது பெரிய போச்சம்பள்ளி வாரச்சந்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கழிப்பறை கட்டி திறக்கவில்லை.
கலெக்டர் சரயு: அதிகாரிகள் சந்தையை ஆய்வு செய்து அறிக்கை கொடுங்கள்.
கிருஷ்ணசாமி: பெரியதள்ள பாடி ரெட்டிவலசை கிராமத்தில் உள்ள புதிய ஏரியின் கரையை உயர்த்தி, அகலப்படுத்த வேண்டும்.
கலெக்டர்: திட்டம் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் கரை உயர்த்தப்படும்.
நசீர் அகமது: ராயக்கோட்டை சாலையில், கே.ஆர்.பி., அணையின் பின்பக்கம், 40 லோடு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
கலெக்டர்: கழிவுகளை அகற்றி வருகிறோம். வேறு இடம் பார்த்து கழிவுகள் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமகவுண்டர்: பையூர் மண்டல ஆராய்ச்சி மையத்தில் புதிய நெல் ரகங்களை ஏன் ஆய்வு செய்யவில்லை.
பையூர் நெல் ஆய்வாளர் கீதா: தமிழகத்தில், எட்டு இடங்களில் நெல் ஆய்வு செய்யப்படுகிறது. அவர்கள், 11 புதிய நெல் ரகங்களை ஆய்வு செய்து கொடுத்துள்ளனர். விவசாயிகள் நேரில் வந்து உங்களுக்கு தேவையான நெல் ரகங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

