/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்னை மரங்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
தென்னை மரங்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்னை மரங்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்னை மரங்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 29, 2025 01:54 AM
கிருஷ்ணகிரி:
தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களை கட்டுப்
படுத்தி, தென்னை மரங்களுக்கு இழப்பீடு கோரியும், சொட்டுநீர் பாசனம் மானியத்தில் வழங்கக்கோரியும், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி, பொருளாளர் கடல்வேந்தன், விவசாயிகள் சங்க, மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட தலைவர் முருகேஷ், வட்ட தலைவர் குணசேகரன், வட்ட செயலாளர் சின்னராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சக்தி ஆகியோர், விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில்,
தமிழகம் முழுவதும் வெள்ளை ஈயால் கடுமையாக பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு, 10,000 ரூபாய் வழங்க வேண்டும். வெள்ளை ஈயை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.
சொட்டுநீர் பாசன திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து விவசாயி
களுக்கும் வழங்க வேண்டும்.
தென்னை மரம் ஏறும் கருவிகள், தென்னை நோய்களை கட்டுப்படுத்த ட்ரோன் மருந்து தெளிப்பு கருவிகளை மானிய விலையில் வழங்க
வேண்டும்.
தேங்காய், கொப்பரை கொள்முதலை அரசே செய்து, தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை
எழுப்பினர்.