/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
3 மாதத்துக்கு பின் மீண்டும் சிறுத்தை வேட்டை சென்னிமலை அருகே விவசாயிகள் அச்சம்

ADDED : ஆக 27, 2025 01:36 AM
சென்னிமலை, சென்னிமலை அருகே மூன்று மாதத்துக்கு பிறகு, ஆட்டுக்கிடாயை சிறுத்தை கொன்றதால், விவசாயிகள் மத்தியில் மீண்டும் பீதி தொடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை வனப்பகுதி, 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சில்லாங்காட்டுவலசில், ஈரோட்டில் வசிக்கும் வக்கீல் பழனிசாமிக்கு தோட்டம் உள்ளது.
இங்கு தோட்டத்தில், 12 வெள்ளாடுகளை கம்பி வேலி அமைத்த பட்டியில் அடைத்து வளர்க்கின்றனர். தோட்டத்து தொழிலாளி நேற்று காலை பட்டிக்கு சென்றபோது ஒரு கிடாயை காணவில்லை. தேடியபோது தோட்டத்து பகுதியில் கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. சென்னிமலை வனத்துறையினர் ஆய்வில், சிறுத்தை கடித்து கொன்றது தெரிய வந்தது.
இதே பகுதியில் உள்ள பாப்பங்காட்டில், விவசாயி அப்புகுட்டி தோட்டத்தில், கடந்த மே, 16ம் தேதி புகுந்த சிறுத்தை ஒரு வெள்ளாட்டை கொன்றது. இதற்கு முன்னதாக பிப்., மற்றும் மார்ச்சில் சிலாங்காட்டு வலசு குமாரசாமி தோட்டத்தில், ஆடுகள் மற்றும் கன்று குட்டிகள் தொடர்ந்து காணாமல் போனது.
இதற்கும் சிறுத்தைதான் காரணம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்து, அப்பகுதியில் கூண்டும் வைத்தனர். ஆனால், சிறுத்தை பிடிபடவில்லை. மூன்று மாதத்துக்கு பிறகு சிறுத்தை மீண்டும் வேட்டையை தொடங்கியுள்ளது. அதேசமயம் வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.