/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
/
போச்சம்பள்ளியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 10, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல், நேற்று காலை, 7:00 மணி வரை, பலத்த மழை பெய்தது.
இதனால் போச்சம்பள்ளி, பாளேதோட்டம் பிரிவு சாலை, நான்கு ரோடு சந்திப்பு சாலை, காவேரிப்பட்டணம் பிரிவு சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலையோரம் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல் நல்ல மழை பெய்ததால், போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டார விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.