/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேப்பனஹள்ளியில் கத்திரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
/
வேப்பனஹள்ளியில் கத்திரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
வேப்பனஹள்ளியில் கத்திரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
வேப்பனஹள்ளியில் கத்திரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
ADDED : நவ 05, 2024 01:17 AM
வேப்பனஹள்ளியில் கத்திரிக்காய்
சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
கிருஷ்ணகிரி, நவ. 5-
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சுற்று வட்டாரத்தில், ஆண்டுதோறும், 500 ஏக்கரில் கத்திரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு விளைவிக்கப்படும் கத்தரிக்காய் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கும், கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டை, கே.ஜி.எப்., கோலார் ஆகிய பகுதிகளுக்கும், ஆந்திரா மாநிலத்திற்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தாண்டு வழக்கத்தை விட அதிகளவில் கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது கத்திரிகாய் ஒரு கிலோ, 30 முதல், 50 ரூபாய் வரை விற்கிறது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'இம்முறை பருவ மழை டிசம்பர் மாதம் அதிகமாக இருக்கும் என, வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், காய்கறி விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் தக்காளியை போல், கத்திரிக்காய் விலையும் அதிகரித்து வருகிறது. தற்போது கத்திரிக்காய் தோட்டங்களில், செடிகளில் பூக்கள் பிடித்துள்ள நிலையில், அடுத்த மாதம் கத்திரிக்காய் அறுவடைக்கு தயாராகும். இந்தாண்டு விலை அதிகரிப்பால், கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்' என்றனர்.

