/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மகனை அழைத்து வரச்சென்ற தந்தை மர்மச் சாவால் அதிர்ச்சி
/
மகனை அழைத்து வரச்சென்ற தந்தை மர்மச் சாவால் அதிர்ச்சி
மகனை அழைத்து வரச்சென்ற தந்தை மர்மச் சாவால் அதிர்ச்சி
மகனை அழைத்து வரச்சென்ற தந்தை மர்மச் சாவால் அதிர்ச்சி
ADDED : டிச 30, 2024 09:06 AM
போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஜம்புகுட்டப்பட்டியை சேர்ந்த விவசாயி சக்திவேல், 47; போச்சம்பள்ளியில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மகனை அழைத்து வருவதற்காக, பைக்கில் நேற்று முன்தினம் இரவு சென்றார்.
கோணனுார் பகுதியில் டூ - வீலருடன் காயமடைந்து சாலையில் கிடந் தார். அவ்வழியே சென்றவர்கள் மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.
வாகனத்தில் இருந்து விழுந்திருந்தால் தலையின் முன்பகுதியில் தான் காயம் இருக்க வேண்டும்.
ஆனால், பின்னந்தலையில் காயம் இருந்ததால், சந்தேக மரணமாக வழக்குப்பதிந்து, போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.