/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதிய பஸ் ஸ்டாண்ட் சாலையில் 'மெகா சைஸ்' குழியால் அச்சம்
/
புதிய பஸ் ஸ்டாண்ட் சாலையில் 'மெகா சைஸ்' குழியால் அச்சம்
புதிய பஸ் ஸ்டாண்ட் சாலையில் 'மெகா சைஸ்' குழியால் அச்சம்
புதிய பஸ் ஸ்டாண்ட் சாலையில் 'மெகா சைஸ்' குழியால் அச்சம்
ADDED : ஆக 12, 2025 01:30 AM
நாமக்கல், நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட், கடந்தாண்டு முதல் முதலைப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து அனைத்து பகுதிகளுக்கும், 'மப்சல்' பஸ்கள் இயக்கப்
படுகின்றன. அதேபோல், டவுன் பஸ்களும் புது பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. இதற்காக முதலைப்பட்டி பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, புதிய இருவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு பகுதி பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வதற்கும், மறு பகுதி பஸ்கள் வெளியே செல்லும் வகையிலும் உள்ளது. அவ்வாறு செல்லும் பஸ்கள் பைபாஸ் சர்வீஸ் சாலை வரை வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.
இந்நிலையில், பைபாஸ் அருகே உள்ள பயணியர் நிழற்கூடம் முன், 'மெகா சைஸ்' குழி ஏற்பட்டுள்ளது. அது நான்கு அடிக்கும் மேல் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அச்சத்தில் பயணிக்கின்றனர். எனவே, பெரும் விபத்து நடக்கும் முன், அந்த குழியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.